உள்ளடக்கத்துக்குச் செல்

கூனாக் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E / 4.68333; 118.25000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூனாக் மாவட்டம்
Kunak District
Daerah Kunak
Kunak District Office
கூனாக் நகரம்

சின்னம்
கூனாக் மாவட்டம் is located in மலேசியா
கூனாக் மாவட்டம்
      கூனாக் மாவட்டம்
ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E / 4.68333; 118.25000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுதாவாவ்
தலைநகரம் கூனாக்
பரப்பளவு
 • மொத்தம்1,139 km2 (440 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்68,893
 • அடர்த்தி60/km2 (160/sq mi)
அஞ்சல் குறியீடு
91XXX
வாகனப் பதிவெண்கள்SD
இணையதளம்ww2.sabah.gov.my/md.kunak/
ww2.sabah.gov.my/pd.knk/

கூனாக் மாவட்டம்; (மலாய்: Daerah Kunak; ஆங்கிலம்: Kunak District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூனாக் மாவட்டத்தின் தலைநகரம் கூனாக் நகரம் (Kunak Town).[1]

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,846 கிலோமீட்டர்கள் (1,147 mi) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து 483 கிலோமீட்டர்கள் (300 mi)) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கூனாக் மாநிலத்தில் 68,893 மக்கள் வசிக்கின்றனர்.[2]

பொது

[தொகு]

சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

மக்கள் தொகையியல்

[தொகு]

2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூனாக் மாவட்டத்தின் மக்கள் தொகை 68,893 ஆகும். பெரும்பான்மையோர் பஜாவு (Bajau); மற்றும் பூகிஸ் இனக் குழுவினர். இவர்களுக்கு அடுத்து ஓராங் சுங்கை (Orang Sungei) இன மக்களும் அதிகமாக உள்ளனர்.

கணிசமான அளவில் சீன சிறுபான்மையினரும் உள்ளனர். கூனாக் நகரத்தில் கடை வணிகம் செய்கின்றனர். அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் எண்ணெய்ப் பனை மரங்களை (Oil Palms) நடுவதிலும் ஈடுபட்டு உள்ளனர்.

அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kunak is situated in the East coast of Sabah and is under the Tawau Division. The population there in Kunak has a majority of the Bajau and Bugis communities. The agriculture industry in Kunak is the main source of income for the people there". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.
  2. "The population development of Kunak as well as related information; Kunak (District, Malaysia) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 15 January 2023.

புற இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மலேசியாவின் மாவட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூனாக்_மாவட்டம்&oldid=4074563" இலிருந்து மீள்விக்கப்பட்டது